Skip to main content

Posts

Showing posts from October, 2017

கொசுவை கொல்ல புறப்பட்ட சிறுவர் பட்டாளம்

டெங்கு என்றாலே வார்த்தையை கேட்டாலே அலறுகிறது தமிழ்நாடு. அந்தளவுக்கு கொசுக்கள்  டெங்கு எனும் கொள்ளை நோயை ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கனவே பல இடங்களிலும் நாம் முகாம் அமைத்து நிலவேம்பு குடிநீர் வழங்கி வரும் நிலையில், பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவர்களின் பேரணியை நடத்த முடிவு செய்தோம். அதற்கேற்ப ஞாயிற்றுக்கிழமை என்றாலும்கூட,  மதரசா மாணவர்கள்  காலை 7 மணிக்கு எல்லாம் நமது பள்ளிக்கு வந்துவிட்டனர். நமது பள்ளியிலிருந்து பதாகைகளை தாங்கி, எம்.ஜி.ஆர். சிலை சந்திப்புக்கு பேரணியாய் சென்றனர் மாணவர்கள். கொசுவை ஒழிப்போம். Defend Against Dengue போன்ற வாசகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தி மாணவர்கள் பேரணி சென்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. எம்ஜிஆர் சிலை சந்திப்பை நாம் அடைந்ததும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் இலவசமாக வினியோகம் செய்தோம். அப்போது இந்து சகோதரர் ஒருவர், நமது பிள்ளைகளின் சமூக சேவையை பாராட்டி, அங்கிருந்த 20 பிள்ளைகளுக்கும் ஆளுக்கொரு டைரி மில்க் சாக்லேட்டுகளை வாங்கிக்கொடுத்து விட்டு பூரிப்புடன் சென்றார். கொசுக்களை ஒழிக்க பேரணி உதவியதோ இல்லையோ, முஸ்லி...

திருப்தியான தியாகத்திருநாள் 2017

மழைக்கு நடுவில் தியாகத்திருநாள் அமைந்தது. தியாகத்திருநாள் தொழுகை அன்று, மழை வந்துவிடுமோ என்று சிறிது அச்சம் கொண்டிருந்த நிலையில், அப்படி எதுவும் வராமல் சிறப்பாய் முடிந்தது பக்ரித் பெருநாள் தொழுகை. மாநில துணை பொதுசெயலாளர் தவ்ஃபீக் அவர்கள் இப்ராஹீம் நபியின் அருமைத் தியாகத்தை ஆணித்தரமாய் எடுத்துரைத்தார்கள். இனிதே முடிவுற்றது பெருநாள் திடல் தொழுகை

மகிழ்ச்சி பொங்கிய ரமளான் தொழுகை

நாள் - 24.06.2017, சனிக்கிழமை இடம்- கே.பி. நகர் திடல் , இராமாபுரம் நபிகளார் அவர்கள், பெருநாளன்று திடலுக்கு சென்று தொழுவது வழக்கம். அவர்களின் சுன்னத்தை நடைமுறைப்படுத்த நாமும் நெசப்பாக்கம் பகுதியில் ஒரு திடலை தேர்வு செய்து அங்கு தொழுகை நடத்தி வருகிறோம். காலை 7.30 மணிக்கு  ரமளான் பெருநாள்தொழுகை ஆரம்பமானது. சகோ. நெற்குன்றம் தௌஃபீக் அவர்கள் உரையாற்றினார்கள். ஆண்கள் மட்டுமின்றி, குழந்தைகளும், பெண்களும் சேர்ந்து குடும்பமாக வந்திருந்தது பெருநாளுக்கே உரிய மகிழ்ச்சியை அனைவருக்கும் ஏற்படுத்தியது. எல்லோரும் தொழுகை முடிந்த பிறகு நீண்ட துஆவில் ஈடுபட்டனர். அல்ஹம்துலில்லாஹ்

பிரம்மாண்ட கல்வி உதவி த்தொகை வழிகாட்டி முகாம்

நாள்  -  ஆகஸ்ட் 6, 2017, ஞாயிற்றுக்கிழமை இடம் - விமலா கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமாபுரம் கல்வியின் முக்கியத்துவத்தை  உணர்ந்துள்ள பொதுமக்கள்,  தங்கள் சேமிப்பு சம்பாத்தியத்தில் பெரும்பகுதி போனாலும் பரவாயில்லை என்ற மனநிலையில், குழந்தைகளை படிக்க வைக்கின்றனர். கல்வி கட்டணத்தை கட்டி முடிப்பதற்குள் அவர்கள் படும் சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களின் சுமையில் கொஞ்சத்தை ஏற்க அரசு சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது யானைப்பசிக்கு சோளப்பொறிதான் என்றாலும், அதைப் பற்றி மக்களுக்கு தெரியாமல் உள்ளது. அதுவும் ஆன்லைன் முறையில் ஸ்காலர்ஷிப் விண்ணப்பிக்கும் உத்தரவு வந்த பின்பு, பலரும் அதை செய்யாமல் விட்டுவிடுகின்றனர். இத்தகையவர்களுக்கு வழிகாட்டும் விதமாக, நாம் ஸ்காலர்ஷிப் கேம்ப் அமைத்து, 126 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பித்து கொடுத்தோம்.  இதில், 82 பேர் கிறிஸ்தவ   மாணவர்கள். முகாம் நடத்துவது என்றால், அதில் விண்ணப்பிக்க கணினிகள் தேவை, விண்ணப்பிக்கும் பயிற்சி உள்ள ஆட்கள் தேவை, முழு நாள் அர்பணிப்பு தேவை என்ற நிலையில், அல்...

வர்தா சாய்த்த மரத்தை மீண்டும் நடுவோம் வாருங்கள்

கடந்த  2016ம் ஆண்டு, டிசம்பர்  மாதத்தில் வர்தா புயல் வந்து சென்னையில் இருந்த ஏராளமான மரங்களை வேரடி மண்ணோடு சாய்த்துவிட்டு போனது. சாய்ப்பது புயலின் வேலை என்றால், அதை நடுவது நம்முடைய வேலை அல்லவா? அந்த வகையில், நெசப்பாக்கம் பகுதியில் மூன்று மரங்களை பாதுகாப்பாக கூண்டுடன் நட்டு, அப்படியே அதை விடாமல், பொறுப்பாக பராமரித்து வரும் வேலையை செய்து வருகிறோம்.

ரமளான் மாதத்தில் ஒரு நற்காரியம்

ரமளான் மாதம் வந்துவிட்டாலே தர்மங்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் இருக்கும். அந்த வகையில், பித்ரா தர்மத்தை தாண்டி இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், வறுமையில் வாடும் 25 குடும்பங்களுக்கு , தலா 2500 ரூபாய் மதிப்பில் மளிகைப் பொருட்களை வினியோகம் செய்தோம். வீடு வீடாக தேடி சென்று, மக்களை கண்ணியப்படுத்தி, போட்டோக்களுக்கு போஸ் கொடுக்க சொல்லாமல் பொருட்களை கொடுத்து, பெருநாளை சந்தோஷமாக கொண்டாடுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தோம். இதைக் கண்டு வயிறு எரிந்த சுன்னத் ஜமாத் நிர்வாகிகள், ஜூம்ஆ பயானில் இதை விமர்சித்து பேசினர். ‘ இன்று மளிகைப் பொருளை கொடுத்துவிட்டு, நாளை தவ்ஹீத் ஜமாத்தில் இணையுங்கள் என்று உங்களை கட்டாயப்படுத்துவார்கள்’ என்று பயான் செய்யப்பட்டதாக சுன்னத் ஜமாத் சகோதர்கள் தெரிவித்தனர். விளம்பரம் வேண்டாம் என்று செய்யும் தர்மத்தை கூட, சுன்னத் ஜமாத் விளம்பரம் செய்ததை கண்டு மகிழ்ச்சி ஒருபக்கமும், எந்த நல்லதை செய்தாலும் ஏதாவது சொல்லி விமர்சனம் செய்யும் அவர்கள் பொறாமையைக் கண்டு  மறுபக்கம் எரிச்சலும் சேர்ந்தே வருகிறது.

நெசப்பாக்கத்தை திரும்பி பார்க்க வைத்த ரத்த தான முகாம்

 நாள் - 30.07.17 , ஞாயிற்றுக்கிழமை நெசப்பாக்கம் கிளை சார்பில் இரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முகாமுக்கு இரண்டு பெரிய பேனர்கள், 3000 நோட்டீஸ்கள் என்று விளம்பரம் செய்யப்பட்டது. 50 பேர் வந்துவிட்டாலே , முகாமுக்கு வெற்றிதான் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில்,  அதில் பங்கேற்றோர் எண்ணிக்கை 107. இதில், அதிகமானவர்கள் பெண்கள்தான் வந்திருந்தனர். கீழ்பாக்கம் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த ரத்த தான முகாமில், பயனாளிகளின் எண்ணிக்கை 70 . இன்னும் பலரும் ஆர்வத்துடன் வந்த நிலையிலும், 1 மணியுடன் ரத்த தான முகாம் நிறைவு செய்யப்பட்டது. அவர்களின் தொலைபேசி எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.