Skip to main content

பிரம்மாண்ட கல்வி உதவி த்தொகை வழிகாட்டி முகாம்








நாள்  -  ஆகஸ்ட் 6, 2017, ஞாயிற்றுக்கிழமை

இடம் - விமலா கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமாபுரம்

கல்வியின் முக்கியத்துவத்தை  உணர்ந்துள்ள பொதுமக்கள்,  தங்கள் சேமிப்பு சம்பாத்தியத்தில் பெரும்பகுதி போனாலும் பரவாயில்லை என்ற மனநிலையில், குழந்தைகளை படிக்க வைக்கின்றனர். கல்வி கட்டணத்தை கட்டி முடிப்பதற்குள் அவர்கள் படும் சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களின் சுமையில் கொஞ்சத்தை ஏற்க அரசு சில திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது யானைப்பசிக்கு சோளப்பொறிதான் என்றாலும், அதைப் பற்றி மக்களுக்கு தெரியாமல் உள்ளது. அதுவும் ஆன்லைன் முறையில் ஸ்காலர்ஷிப் விண்ணப்பிக்கும் உத்தரவு வந்த பின்பு, பலரும் அதை செய்யாமல் விட்டுவிடுகின்றனர். இத்தகையவர்களுக்கு வழிகாட்டும் விதமாக, நாம் ஸ்காலர்ஷிப் கேம்ப் அமைத்து, 126 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்காக விண்ணப்பித்து கொடுத்தோம்.  இதில், 82 பேர் கிறிஸ்தவ   மாணவர்கள். முகாம் நடத்துவது என்றால், அதில் விண்ணப்பிக்க கணினிகள் தேவை, விண்ணப்பிக்கும் பயிற்சி உள்ள ஆட்கள் தேவை, முழு நாள் அர்பணிப்பு தேவை என்ற நிலையில், அல்லாஹ் அதற்குரிய வழிகளை லேசாக்கி, நினையாப்புறத்திலிருந்து உதவிகளை செய்தான். இனிதே ஸ்காலர்ஷிப் கேம்ப் முடிவடைந்தது. விமலா கான்வென்ட் பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்பை கண்டிப்பாக குறிப்பிட்டு பாராட்டி ஆக வேண்டும். மதிய உணவு, வை ஃபை வசதி, கணினி வசதி என்று சகலத்தையும் செய்து கொடுத்தார்கள். 

Comments

Popular posts from this blog

கொசுவை கொல்ல புறப்பட்ட சிறுவர் பட்டாளம்

டெங்கு என்றாலே வார்த்தையை கேட்டாலே அலறுகிறது தமிழ்நாடு. அந்தளவுக்கு கொசுக்கள்  டெங்கு எனும் கொள்ளை நோயை ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கனவே பல இடங்களிலும் நாம் முகாம் அமைத்து நிலவேம்பு குடிநீர் வழங்கி வரும் நிலையில், பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவர்களின் பேரணியை நடத்த முடிவு செய்தோம். அதற்கேற்ப ஞாயிற்றுக்கிழமை என்றாலும்கூட,  மதரசா மாணவர்கள்  காலை 7 மணிக்கு எல்லாம் நமது பள்ளிக்கு வந்துவிட்டனர். நமது பள்ளியிலிருந்து பதாகைகளை தாங்கி, எம்.ஜி.ஆர். சிலை சந்திப்புக்கு பேரணியாய் சென்றனர் மாணவர்கள். கொசுவை ஒழிப்போம். Defend Against Dengue போன்ற வாசகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தி மாணவர்கள் பேரணி சென்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. எம்ஜிஆர் சிலை சந்திப்பை நாம் அடைந்ததும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் இலவசமாக வினியோகம் செய்தோம். அப்போது இந்து சகோதரர் ஒருவர், நமது பிள்ளைகளின் சமூக சேவையை பாராட்டி, அங்கிருந்த 20 பிள்ளைகளுக்கும் ஆளுக்கொரு டைரி மில்க் சாக்லேட்டுகளை வாங்கிக்கொடுத்து விட்டு பூரிப்புடன் சென்றார். கொசுக்களை ஒழிக்க பேரணி உதவியதோ இல்லையோ, முஸ்லி...

நெசப்பாக்கத்தை திரும்பி பார்க்க வைத்த ரத்த தான முகாம்

 நாள் - 30.07.17 , ஞாயிற்றுக்கிழமை நெசப்பாக்கம் கிளை சார்பில் இரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த முகாமுக்கு இரண்டு பெரிய பேனர்கள், 3000 நோட்டீஸ்கள் என்று விளம்பரம் செய்யப்பட்டது. 50 பேர் வந்துவிட்டாலே , முகாமுக்கு வெற்றிதான் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில்,  அதில் பங்கேற்றோர் எண்ணிக்கை 107. இதில், அதிகமானவர்கள் பெண்கள்தான் வந்திருந்தனர். கீழ்பாக்கம் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த ரத்த தான முகாமில், பயனாளிகளின் எண்ணிக்கை 70 . இன்னும் பலரும் ஆர்வத்துடன் வந்த நிலையிலும், 1 மணியுடன் ரத்த தான முகாம் நிறைவு செய்யப்பட்டது. அவர்களின் தொலைபேசி எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளது.