ரமளான் மாதம் வந்துவிட்டாலே தர்மங்கள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் இருக்கும். அந்த வகையில், பித்ரா தர்மத்தை தாண்டி இன்னும் அதிகமாக செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில், வறுமையில் வாடும் 25 குடும்பங்களுக்கு , தலா 2500 ரூபாய் மதிப்பில் மளிகைப் பொருட்களை வினியோகம் செய்தோம். வீடு வீடாக தேடி சென்று, மக்களை கண்ணியப்படுத்தி, போட்டோக்களுக்கு போஸ் கொடுக்க சொல்லாமல் பொருட்களை கொடுத்து, பெருநாளை சந்தோஷமாக கொண்டாடுங்கள் என்று சொல்லிவிட்டு வந்தோம். இதைக் கண்டு வயிறு எரிந்த சுன்னத் ஜமாத் நிர்வாகிகள், ஜூம்ஆ பயானில் இதை விமர்சித்து பேசினர். ‘ இன்று மளிகைப் பொருளை கொடுத்துவிட்டு, நாளை தவ்ஹீத் ஜமாத்தில் இணையுங்கள் என்று உங்களை கட்டாயப்படுத்துவார்கள்’ என்று பயான் செய்யப்பட்டதாக சுன்னத் ஜமாத் சகோதர்கள் தெரிவித்தனர். விளம்பரம் வேண்டாம் என்று செய்யும் தர்மத்தை கூட, சுன்னத் ஜமாத் விளம்பரம் செய்ததை கண்டு மகிழ்ச்சி ஒருபக்கமும், எந்த நல்லதை செய்தாலும் ஏதாவது சொல்லி விமர்சனம் செய்யும் அவர்கள் பொறாமையைக் கண்டு மறுபக்கம் எரிச்சலும் சேர்ந்தே வருகிறது.
டெங்கு என்றாலே வார்த்தையை கேட்டாலே அலறுகிறது தமிழ்நாடு. அந்தளவுக்கு கொசுக்கள் டெங்கு எனும் கொள்ளை நோயை ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கனவே பல இடங்களிலும் நாம் முகாம் அமைத்து நிலவேம்பு குடிநீர் வழங்கி வரும் நிலையில், பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவர்களின் பேரணியை நடத்த முடிவு செய்தோம். அதற்கேற்ப ஞாயிற்றுக்கிழமை என்றாலும்கூட, மதரசா மாணவர்கள் காலை 7 மணிக்கு எல்லாம் நமது பள்ளிக்கு வந்துவிட்டனர். நமது பள்ளியிலிருந்து பதாகைகளை தாங்கி, எம்.ஜி.ஆர். சிலை சந்திப்புக்கு பேரணியாய் சென்றனர் மாணவர்கள். கொசுவை ஒழிப்போம். Defend Against Dengue போன்ற வாசகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தி மாணவர்கள் பேரணி சென்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. எம்ஜிஆர் சிலை சந்திப்பை நாம் அடைந்ததும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் இலவசமாக வினியோகம் செய்தோம். அப்போது இந்து சகோதரர் ஒருவர், நமது பிள்ளைகளின் சமூக சேவையை பாராட்டி, அங்கிருந்த 20 பிள்ளைகளுக்கும் ஆளுக்கொரு டைரி மில்க் சாக்லேட்டுகளை வாங்கிக்கொடுத்து விட்டு பூரிப்புடன் சென்றார். கொசுக்களை ஒழிக்க பேரணி உதவியதோ இல்லையோ, முஸ்லி...


Comments
Post a Comment