கடந்த 2016ம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் வர்தா புயல் வந்து சென்னையில் இருந்த ஏராளமான மரங்களை வேரடி மண்ணோடு சாய்த்துவிட்டு போனது. சாய்ப்பது புயலின் வேலை என்றால், அதை நடுவது நம்முடைய வேலை அல்லவா? அந்த வகையில், நெசப்பாக்கம் பகுதியில் மூன்று மரங்களை பாதுகாப்பாக கூண்டுடன் நட்டு, அப்படியே அதை விடாமல், பொறுப்பாக பராமரித்து வரும் வேலையை செய்து வருகிறோம்.
டெங்கு என்றாலே வார்த்தையை கேட்டாலே அலறுகிறது தமிழ்நாடு. அந்தளவுக்கு கொசுக்கள் டெங்கு எனும் கொள்ளை நோயை ஏற்படுத்தி வருகின்றன. ஏற்கனவே பல இடங்களிலும் நாம் முகாம் அமைத்து நிலவேம்பு குடிநீர் வழங்கி வரும் நிலையில், பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாணவர்களின் பேரணியை நடத்த முடிவு செய்தோம். அதற்கேற்ப ஞாயிற்றுக்கிழமை என்றாலும்கூட, மதரசா மாணவர்கள் காலை 7 மணிக்கு எல்லாம் நமது பள்ளிக்கு வந்துவிட்டனர். நமது பள்ளியிலிருந்து பதாகைகளை தாங்கி, எம்.ஜி.ஆர். சிலை சந்திப்புக்கு பேரணியாய் சென்றனர் மாணவர்கள். கொசுவை ஒழிப்போம். Defend Against Dengue போன்ற வாசகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தி மாணவர்கள் பேரணி சென்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. எம்ஜிஆர் சிலை சந்திப்பை நாம் அடைந்ததும், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் இலவசமாக வினியோகம் செய்தோம். அப்போது இந்து சகோதரர் ஒருவர், நமது பிள்ளைகளின் சமூக சேவையை பாராட்டி, அங்கிருந்த 20 பிள்ளைகளுக்கும் ஆளுக்கொரு டைரி மில்க் சாக்லேட்டுகளை வாங்கிக்கொடுத்து விட்டு பூரிப்புடன் சென்றார். கொசுக்களை ஒழிக்க பேரணி உதவியதோ இல்லையோ, முஸ்லி...



Comments
Post a Comment